காமராஜ் நகர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தலை நடத்தும் அலுவலரிடம் பெற்றார்.
காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தமிழகம் உட்பட அனைத்து தொகுதி வாக்கு எண்ணிக்கையும் இன்று காலை 8 தொடங்கி அறிவிக்கப்பட்டு வருகின்றது.அந்தவகையில் இன்று காலை 9 மணிக்கு புதுச்சேரி மாநில காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை 9 மணிக்கெல்லாம் முடிவு பெற்று அறிவிக்கப்பட்ட்து. அதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமார் எதிர்த்துப் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரை விட 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் முகமது மன்சூரிடமிருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவர் பெற்றார்.