Categories
தேசிய செய்திகள்

“சுயஊரடங்கு” நாளை 5 மணி வரை…. தமிழக அரசு நீட்டிப்பு…!!

கொரோனோ தொற்றை தடுக்க சுயஊரடங்கை நாளை அதிகாலை 5 மணி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

கொரோனோ வைரஸ் தொற்று பாதிப்பை தடுக்கும் விதமாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சுய ஊரடங்கு உத்தரவை இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார். அவரது அறைகூவலை ஏற்று பலர் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் 9 மணி வரை மட்டுமே விதிக்கப்பட்டிருந்த சுய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து நீட்டிக்கப்பட்ட சுய ஊரடங்கு உத்தரவுக்கு பொதுமக்கள் ஆதரவு தருமாறு தமிழக அரசும், சுகாதாரத் துறையும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Categories

Tech |