ஜனவரி 15ல் இருந்து 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வருகின்றனர். பள்ளிகள் திறப்பது குறித்து என்ற எந்த சூழலும் தெரியவில்லை. நவம்பர் 16-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க முடிவு எடுத்திருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் பெற்றோர்களின் எதிர்ப்பால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இருப்பினும் பள்ளிக்கல்வித்துறைக்கு என்ன தேவையோ அது சிறப்பாக நடந்து வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்: “ஜனவரி 15-ஆம் தேதி முதல் 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்படும் என்று கூறியிருந்தார். ஜனவரி 20ல் 7,500 பள்ளிகளில் பயிற்சியாளர்களுடன் கூடிய அறிவியல் ஆய்வுக்கூடம் தொடங்கப்படும் என்று கூறினார்.
நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க விரைவில் அரசு நடவடிக்கை எடுக்கும். ஐஐஎஸ் படிப்பவர்களுக்கு தேவைப்படும் அளவுக்கு தமிழக பாட புத்தகம் சிறப்பாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.