ஜனவரி-30 ஆம் தேதி தேமுதிக தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தினை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் ஆலோசனை கூட்டத்தைநடத்திவருகின்றனர். இந்நிலையில் ஜனவரி 30-ஆம் தேதி தேமுதிகவின் தேர்தல் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 10.45 மணிக்கு ஆலோசனை நடைபெறும் என்று கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? இல்லை தனித்துப் போட்டியிடுவதா? என்று முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.