Categories
மாநில செய்திகள்

ஜனவரி 4 முதல் “2500 பொங்கல் பரிசு”… அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..!!

பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்க அரசாணையை தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் கார்டுகளுக்கு ரூபாய் ஆயிரம் பணமும் பொங்கல் பரிசு தொகையும் வழங்கப்படும். வழக்கமாக வழங்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாய் உயர்த்தி ரூபாய் 2500 ஆக பொங்கலுக்கு வழங்க இருப்பதாக கடந்த 19-ஆம் தேதி தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டார். இதனை எதிர்க்கட்சி தலைவர்கள் தேர்தல் இலஞ்சமாக வழங்கப்படும் பணம் என்று விமர்சித்து வந்தனர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் பண்டிகையை சிறப்பாக கொண்டாட இந்த பணம் வழங்கப்பட்டதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் ஜனவரி 4ஆம் தேதி முதல் பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் 2.10 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும், இலங்கை தமிழர்களின் 18,923 அட்டைகளுக்கும், இந்த பணம் கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அரிசி அட்டைகளாக மாற்றம் செய்ய விண்ணப்பித்த 3,75,235 அட்டைகளுக்கும் பரிசு வழங்கப்படும் என்று இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |