சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் தொடர்ந்து தனது ஆதிகத்தைச் செலுத்திவருகிறது. சர்வதேச அளவில் நான்காம் இடத்தில் உள்ள சியோமி, பல்வேறு நாடுகளிலும் தனது சந்தையை விரிவாக்கத் திட்டமிட்டுவருகிறது.இதுதொடர்பாக சியோமியின் சர்வதேச பிரிவுக்கான இயக்குநர் வாங் சியாங் கூறுகையில், “சியோமி நிறுவனம் அடுத்தாண்டு ஜப்பான் சந்தையில் நுழையவுள்ளது. இதற்காகப் பல ஜப்பான் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளோம்” என்றார்.
மேலும். Data protection எனப்படும் பயனாளர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களைப் பாதுகாப்பது குறித்துப் பேசிய அவர், “இந்த விஷயத்தில் நாங்கள் கூகுளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம். ஐரோப்பாவிலும் இது தொடர்பான விதிகளை நாங்கள் முறையாகவே பின்பற்றிவருகிறோம். ஜப்பானிலும் அதேபோலப் பின்பற்றுவோம்” என்றார்.சியோமி நிறுவனம் வரும் 13ஆம் தேதி ஸ்வீடன் நாட்டில் தனது முதல் ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.