Categories
உலக செய்திகள்

மிரட்டும் கொரோனா, நாடு முழுவதும் அவசர நிலை – ஜப்பான் அரசு முடிவு

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் அவசர நிலையை செயல்படுத்த ஜப்பான் பிரதமர் முடிவு செய்துள்ளார் 

உலக நாடுகளில் பரவத் தொடங்கிய கொரோனா ஜப்பானில் அதன் தாக்கத்தை முன்பைவிட அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டும் சூழல் உருவாகியுள்ளது. அதேபோன்று பலியானவர்களின் எண்ணிக்கையும் 200 கிட்ட  நெருங்கியுள்ளது.  இந்நிலையில் வைரஸ் பரவுவதை தடுக்க பிரதமர் ஷின்ஜோ அபே தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த பகுதிகளான தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 7 மாகாணங்களில் அவசரநிலையை செயல் படுத்தியுள்ளார் ஷின்ஜோ.

இந்நிலையில் வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்கள் மாகாணங்களிலும் அவசர நிலையை செயல்படுத்த வேண்டுமென சில ஆளுநர்கள் பிரதமருக்கு அழைப்பு விடுத்தனர். சில மாகாணங்களில் அரசிடம் அனுமதி பெறாமலேயே ஆளுநர்கள் அவசர நிலையை செயல்படுத்தி உள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதிலும் அவசர நிலையை விரிவுபடுத்துவதற்கான முடிவினை பிரதமர் ஷின்ஜோ எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அனைத்து மாகாண ஆளுநர்களுடன் ஷின்ஜோ தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்

Categories

Tech |