Categories
உலக செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்டு வரும் ஜப்பான்… நாடு தழுவிய அவசர நிலையை நீக்கி பிரதமர் உத்தரவு!!

ஜப்பானில் பிரகடனப்படுத்தப்பட்ட நாடு தழுவிய சுகாதார அவசர நிலை நீக்கப்படுவதாக பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார்.

ஜப்பானில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறைத்து வருவதை அடுத்து அவசர நிலை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்றின் பரவல் காரணமாக ஜப்பானில் கடந்த மாதம் 7ம் தேதி அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதன் பின்னர் நோய்த்தொற்றின் தீவிரம் கணிசமான அளவு குறையத் துவங்கியவுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டன.

ஆனாலும் டோக்யோ, சிபா, கனகவா மற்றும் சிடமா, வடக்கு ஹொக்கைடோ மாகாணங்களில் அவசர நிலைக் கட்டுப்பாடுகள் நீடித்து வந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஜப்பானில் அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலை முழுவதுமாக நீக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் சின்சோ அபே இன்று அறிவித்துள்ளார். நாட்டில் மிக குறைந்த அளவே கொரோனா பாதிப்பு இருப்பதால் தரவுகளை நீக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய நிலவரப்படி, ஜப்பானில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,550 பேர் ஆவர். அதில் இதுவரை 13,413 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 820 பேர் கொரோனவால் பலியாகியுள்ளனர். தற்போது வரை சிகிச்சையில் 2,317 பேர் உள்ளனர். நாளுக்கு நாள் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |