Categories
உலக செய்திகள்

பருவநிலை பாதிப்பு…. நிலக்கரி பயன்படுத்த எதிர்ப்பு…. பிரபல நாட்டில் மக்கள் போராட்டம்….!!

ஜப்பானில் மின் உற்பத்திக்காக நிலக்கரி பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜப்பானின் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டை சேர்ந்தவர்கள் நடனமாடி போராட்டம் நடத்தினர். மேலும், கடந்த 2011 ஆம் ஆண்டு சுனாமி தாக்கியதில் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையம் விபத்துக்குள்ளானது.

இதனை தொடர்ந்து, அந்நாட்டில் பெரிய அளவிலான 7 மின் உற்பத்தி நிலையங்கள் நிலக்கரியை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலக்கரியால், பருவநிலை பாதிப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர். தற்போது, க்ளைட் நதிக்கரையின் அருகே பிரபல போக்கிமான் கார்ட்டூன் தொடரில் இடம்பெறும் Pikachu கதாப்பாத்திரம் போல் மக்கள் வேடமணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |