ஜப்பானில் முதியோர் தினத்தை முன்னிட்டு இரட்டை சகோதரிகள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர் .
ஜப்பானில் சுமார் 13 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் 29 சதவீதம் பேர் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது அதிலும் 86 ஆயிரத்து 510 பேர் 100 வயதை எட்டியவர்கள் என்றும் மீதி உள்ளவர்கள் 100 வயதை தாண்டியவர்கள் என்றும் அங்குள்ள சுகாதாரம் மற்றும் நலத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஜப்பானில் முதியோர் தினத்தை முன்னிட்டு அங்கு 107 வயதான உமேனோ சுமியம்மா மற்றும் கோடமா என்கிற இரட்டை சகோதரிகள் உலக சாதனை படைத்துள்ளனர் .
இதனை தொடர்ந்து இரட்டை சகோதரிகளான உமேனோ சுமியம்மா மற்றும் கோடமா 1913 ல் நவம்பர் 5 தேதி மேற்கு ஜப்பானில் இருக்கும் ஷோடோஷிமா என்ற தீவில் பிறந்துள்ளனர். குறிப்பாக இன்னும் ஒரு மாதத்தில் இவர்கள் 108 வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது .