Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஜப்பானிய மோட்டார் சைக்கிள் இந்தியாவில் … வெறித்தன வெயிட்டிங்கில் இளைஞர்கள் ..!!

ஹோன்டா நிறுவனம் புதியதாக ஹோன்டா சி.பி.150எம் என்ற மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது .

ஹோன்டா நிறுவனம் தற்போது சர்வதேச ஜப்பானிய மோட்டார் சைக்கிளான  யு.ஜே.எம்  அடிப்படையில் ஹோன்டா சி.பி.150எம் என்ற அதிநவீன மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது . இந்த ஹோன்டா சி.பி.150எம் மோட்டார் சைக்கிளானது  யமஹா நிறுவனத்தின் எம்.டி 15 டிரேசர் மாடலுக்கு போட்டியாக தயாரிக்கப்பட்டுள்ளது.

Image result for ஹோன்டா சி.பி.150எம்

மேலும் , சி.பி.150எம் என்ற பெயரில் தாய்லாந்தில் இந்த மோட்டார் சைக்கிள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இது சி.பி. 150 ஆர். ஸ்ட்ரீட்ஸ்டெர் மாடலை அடிப்படையாகக் கொண்டுள்ளது . இந்த மோட்டார்சைக்கிளில் மேலிருந்து கீழாக வடிவமைக்கப்பட்டுள்ள 41 மி.மீ. போர்க்கானது , நீண்ட தூர பயணத்துக்கு சிறந்ததாக உள்ளது . இதுமட்டுமின்றி , பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது .

Image result for ஹோன்டா சி.பி.150எம்

 

மேலும் , இது அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது . இதுமட்டுமின்றி , இதன் ஹேண்டில்பாரானது ஓட்டுநரின் வசதிக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது . இந்த புதிய மோட்டார் சைக்கிளை ஹோன்டா நிறுவனத்தின் இத்தாலிய ஆராய்ச்சி வடிவமைப்பு பிரிவானது  உருவாக்கியுள்ளது. இதில்  149 சி.சி. என்ஜின் உள்ளது. மேலும் ,  DOHC லிக்விட் கூல்டு என்ஜின் 17.1 பி.எஸ். திறன் மற்றும் ,

 

Image result for honda logo

 

14.4 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் கொண்டுள்ளது . இதனுடன்  6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது .மேலும் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வசதி கொடுக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் , இளைஞர்களை வெகுவாகக் கவரும் இந்த மோட்டார் சைக்கிள் விரைவிலேயே இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |