Categories
உலக செய்திகள்

“சீனாவுக்கு நல்ல பாடம் புகட்டுவோம்”…. அடுத்தடுத்த ஆப்பு…. புறக்கணிக்கும் பிரபல நாடுகள்….!!

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அடுத்த ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று கூறியுள்ளார்.

ஜப்பான் நாடாளுமன்றத்தில் அடுத்த ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்வது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்துள்ள பிரதமர் புமியோ கிஷிடா தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து விவகாரங்களையும் தீவிர ஆராய்ந்த பிறகே முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே பிரிட்டன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் சீனாவில் நடைபெறும் இனப்படுகொலைகளை கருத்தில் கொண்டும், உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் விதமாகவும் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளன.

Categories

Tech |