Categories
உலக செய்திகள்

இனிமேல் குதிரைவால் சடைக்கு தடை…. ஜப்பான் அரசின் வினோத காரணம்…!!!

ஜப்பானில் மாணவிகள் பள்ளியில் குதிரைவால் சடை அணிந்து வர தடை செய்யப்பட்டிருக்கிறது.

ஜப்பான் நாட்டில் இருக்கும் பள்ளிகள், மாணவிகள் இனிமேல் பள்ளிக்கூடத்திற்கு குதிரைவால் சிகை அலங்காரம் செய்து வரக்கூடாது என்று தடை செய்திருக்கிறது. அதாவது குதிரைவால் அலங்காரம் செய்து வந்தால் மாணவிகளின் கழுத்துப்பகுதி தெரியும் வண்ணம் இருக்கிறது. இது மாணவர்களுக்கு ஆபாசத்தை தூண்டும் விதத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி ஒரு நடுநிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியரான மோடோகி சுகியாமா தெரிவித்ததாவது, நான் ஒரு போதும் இவ்வாறான விதிகளை ஆதரிக்க மாட்டேன். இதனை எதிர்க்கிறேன். ஆனால் இவ்வாறான விதிகளுக்கு தகுந்த எதிர்ப்பு இல்லை. எனவே, இந்த விதிகள் சாதாரணமாகிவிட்டது. மாணவிகள் இதனை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், சில மக்கள் இந்த தடையானது, பெண்களின் மீது ஆண்களின் பார்வையை தவறாக திருப்பும் வகையில் பின்னோக்கு சிந்தனையாக இருக்கிறது என்று எதிர்க்கிறார்கள்.

Categories

Tech |