குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு ஜப்பானில் இன்று நடைபெறுகிறது.
குவாட் கூட்டு நாடுகளில் இடம்பெற்றிருக்கும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு ஜப்பானில் இன்று நடைபெறுகிறது. பயங்கரவாத எதிர்ப்பு இணைய மற்றும் கடல் பாதுகாப்பு மேம்பாட்டு நிதி மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு மீட்பு நடவடிக்கை ஆகியவற்றை இணைந்து மேற்கொள்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்க பட உள்ளது.
5ஜி மற்றும் 5ஜிபிளஸ் தொழில்நுட்பங்களில் இந்தியாவுடன் இணைந்து ஈடுபட ஜப்பான் முடிவு செய்துள்ளதால் அது குறித்தும் இன்றைய சந்திப்பின் போது பேசப்பட உள்ளது. சீனாவின் ஆதிக்கம் குறித்து இக்கூட்டத்தில் பேசப்பட கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.