ஜப்பானில் இன்று காலை ஆற்றல் வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் Ibaraki மாகாணத்தில் இன்று காலை பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டரில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் ஜப்பான் நாட்டு உள்ளூர் நேரப்படி அதிகாலை 6.14 மணியளவில் ஏற்பட்டது.
தற்போது, நிலநடுக்கத்தின் மையப்பகுதி வடக்கே 36.5 டிகிரி அட்சரேகை, 140.6 டிகிரி கிழக்கே தீர்க்கரேகை மற்றும் 60 கி.மீ ஆழத்தில் தஞ்சம் கொண்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இபராக்கி மற்றும் புகுஷிமா ஆகிய மாகாணத்தின் சில பகுதிகளில் ரிக்டரில் 4 ஆக பதிவாகிய நிலநடுக்கம் 7 வரை உச்சம் தொட்டது. இது குறித்த தகவல்களை அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.