ஜப்பானில் தண்டவாளத்திலும், சாலையிலும் இயங்கக்கூடிய பார்ப்பதற்கு மினி பேருந்து போல் இருக்கும் வாகனத்தை கண்டறிந்துள்ளார்கள்.
ஜப்பானில் தண்டவாளத்திலும், சாலையிலும் இயங்கக்கூடிய பார்ப்பதற்கு மினி பேருந்து போல் இருக்க கூடிய வாகனத்தை கண்டறிந்துள்ளார்கள். இந்த இரட்டை பயன்பாட்டைவுடைய மேற்குறிப்பிட்டுள்ள வாகனம் சாலையில் செல்லும்போது ரப்பர் டயரில் இயங்குகிறது.
அதேபோல் தண்டவாளத்தில் செல்லும்போது ரப்பர் டயரிலிருந்து இரும்பு சக்கரங்கள் கீழிறங்கி ரயில் போல் இயங்குகிறது. இந்த 21 பேர் பயணிக்கக்கூடிய மினி பேருந்து சாலையில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்குகிறது.
மேலும் இந்த மினி பேருந்து தண்டவாளத்தில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. இந்நிலையில் இந்த பேருந்து ஜப்பான் நாட்டிலுள்ள டோகுஷிமா என்னும் மாநிலத்தில் நாளையிலிருந்து பயன்பாட்டிற்கு வரவுள்ளது.