ஜப்பானில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் வெளிநாட்டு பயணிகளின் பெயர்கள் பொதுவெளியில் அறிவிக்கப்படும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஜப்பானில் நேற்றைய நிலவரப்படி 8,393 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஜப்பானில் இரு மடங்காக பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே ஜப்பான் அரசு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இரண்டு வாரங்கள் கட்டாய தனிமைப்படுத்துதலை அமலில் வைத்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் தங்களுடைய செல்போன்களில் லொகேஷன் டிராக்கிங்கை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டால் பொதுவெளியில் அவர்களது பெயர்கள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளிநாடுகளிலிருந்து வந்த 3 பேர் இந்த கட்டுப்பாடுகளை மீறிய செயல்பட்ட நிலையில் அவர்களது பெயர்களை பொதுவெளியில் அறிவித்துள்ளது.