ஜப்பான் நாடாளுமன்ற கீழவையானது கலைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது அந்நாட்டின் நாடாளுமன்ற கீழவையை கலைத்துள்ளார். குறிப்பாக 11 நாட்களுக்கு முன்பு முன்னாள் பிரதமரான யோஷீஹிடே சுகாவிடம் இருந்து பதவியை பெற்றுள்ளார். தற்பொழுது புமியோவின் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் பெரும்பான்மையை உறுதி செய்யும் வகையில் நடாளுமன்றத்தின் கீழவையை கலைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதிலும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் கீழவைக்கு வரும் 31 ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.
இதனை அடுத்து புதிய நாடாளுமன்றம் அமையும். இதனை தொடர்ந்து பிரதமர் புதிய அரசை தோற்றுவிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மக்களிடம் அவருக்கு நன் மதிப்பு இருப்பதால் அவரது தலைமையில் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இதே போன்று கடந்த 2017 ஆம் ஆண்டு ஷின்சோ அபே பிரதமராக இருந்த போது நாடாளுமன்ற கீழவை கலைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.