ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று மாலை கோலாகலமாக தொடங்கிய ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனும் கலந்து கொண்டுள்ளார்.
உலக அளவில் பரவி வந்த கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2020 ல் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகளானது இந்த ஆண்டு நேற்று மாலை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியது. இதில் மற்ற நாடுகளை சேர்ந்த போட்டியாளர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த ஒலிம்பிக் போட்டியானது உலக அளவில் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இதனால் நேற்று மாலை டோக்கியோவில் கலைநிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த ஒலிம்பிக் திருவிழாவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்துகொள்ள டோக்கியோவிற்கு சென்றுள்ளார்.
அவர் அங்கு செல்வதற்கு முன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் “உலக ஒலிம்பிக் போட்டிகளின் பட்டியலில் 17வது இடத்தில் உள்ள பிரான்ஸ் 40 பதக்கங்களை வெல்லும் என தெரிவித்துள்ளார். மேலும் இனி வரும் 2024 ல் நடக்கும் ஒலிம்பிக் போட்டியானது பாரிஸில் நடைபெறுவதற்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் அதில் பிரான்ஸ் 5வது இடத்தை தொடும்” என்றும் கூறியுள்ளார்.