சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு உலையின் கதிர்வீச்சு நீரை கடலில் கலக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள டோக்கியோவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு உலையின் கதிர்வீச்சு நீரை கடலில் கலக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இது கரையில் இருக்கும் மீனவ மக்களை பாதிக்காமல் இருப்பதற்காக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சுரங்கப்பாதை ஒன்று அமைத்து அதில் கதிர்வீச்சு நீரை சேமிக்கவும் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு உலக நாடுகளை சேர்ந்த சூழலியல் செயல்பாபாட்டாளர்களும் மீனவ மக்களும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதாவது ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவில் கடந்த 2011 ஆம் பயங்கரமான நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அங்குள்ள புகுஷிமா அணுமின் நிலையம் சேதமடைந்துள்ளது.
இதனையடுத்து புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள அணுமின் நிலைய உலைகளை குளிரூட்டும் அமைப்பு சேதமடைந்ததால் அதிக அளவிலான வெப்பம் வெளியேறி உலைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து புகுஷிமா அணுமின் நிலையத்தில் உலைகளை குளிரூட்ட இருந்த நீரில் கதிர்வீச்சு கலந்து அது கடலில் கலக்க துவங்கியுள்ளது. அந்த சமயத்தில் கதிர்வீச்சு கலந்த நீர் கடலில் கலக்காமல் இருப்பதற்காக பல தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டது. அதாவது அதற்காக ஒரு தொட்டி அமைத்து அதில் நீரை அரசு சேமித்து வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது சேமித்து வைக்கப்பட்ட அந்த நீரை சுத்திகரித்து பசுபிக் பெருங்கடலில் கலக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் அந்த திட்டத்தை செயல்படுத்த அந்நாட்டு அமைச்சரவையும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் பல தரப்பிலிருந்து அந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக ஜப்பான் அரசு சுரங்க பாதை அமைக்க முடிவெடுத்துள்ளது. அதன்பின் இந்தப் பணியானது வருகிற 2023 ஆம் ஆண்டு தொடங்கும் என அணு உலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும் இதற்கு முன்பு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் விளையும் திராட்சைகளில் புகுஷிமா கதிர்வீச்சு கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு கதிர்வீச்சு ஆனது பெருமளவில் பரவி வருகின்றது. இதேபோல் இன்னும் பல இடங்களுக்கு கதிர்வீச்சு பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.