Categories
உலக செய்திகள்

டோக்கியோவில் உணரப்பட்ட நிலநடுக்கம்…. 32 பேர் படுகாயம்…. தகவல் வெளியிட்ட செய்தி நிறுவனம்….!!

டோக்கியோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 32 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு 5.9 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் நிலநடுக்கமானது டோக்கியோவின் கிழக்கிலுள்ள சிபா மாகாணத்தில் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்துள்ளது. இதனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்த நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் குலுங்கின. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தினால் எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. குறிப்பாக ஐந்து பேர் நிலநடுக்கத்தினால் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. தற்பொழுது காயமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 32 ஆக உயர்ந்துள்ளது என்று பிரபல ஜப்பான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |