12 வருடங்களாக வெறும் அரைமணி நேரம் மட்டுமே தூங்குவதாக ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 34 வயதான டெய்சுகே ஹோரி என்பவர் கடந்த 12 வருடங்களாக நாளொன்றுக்கு வெறும் அரைமணி நேரம் மட்டுமே உறங்குவதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் ஆரோக்கியத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் குறைவான நேரம் மட்டும் தூங்குவோர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். இவர் நூற்றுக்கணக்கான மக்களுக்கு குறைந்த நேரம் தூங்குவது எப்படி என்பது குறித்தும் பயற்சி அளித்து வருகிறார். பொதுவாக ஆறு முதல் ஒன்பது மணி நேரம் ஒருவருக்கு உறக்கம் வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் உறக்கம் போக மீதியுள்ள 16 மணி நேரம் தனக்கு வாழ்வில் சாதனை படைக்க காணவில்லை என்பதால் தூக்கத்தை கைவிட்டதாக கூறுகிறார். இதை உலகிற்கு நிரூபணம் செய்து காட்டுவதற்காக ஜப்பான் நாட்டின் பிரபல ஊடகம் ஒன்றை தன்னுடன் மூன்று நாட்கள் இருக்க செய்துள்ளார். அப்பொழுது அவர் என்ன செய்கிறார் என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தி காட்டியுள்ளார். அதில் முதல் நாள் காலை 8 மணிக்கு விழித்து உடற்பயிற்சியில் ஆரம்பித்து செய்தி வாசிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பின்னர் 2 மணியளவில் உறங்கி சரியாக 26 நிமிடங்கள் கழித்து அலாரம் இல்லாமல் எழுந்துள்ளார். இதனையடுத்து அலை சறுக்கில் விளையாட்டு, உடற்பயிற்சி செய்தித்தாள் வாசிப்பு, நட்பு என்று அன்றைய நாள் முழுவதும் கழித்துள்ளார். மேலும் தூங்கும் நேரங்களில் அவரது சங்க உறுப்பினர்களுடன் பொழுதைச் செலவிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக அந்த 3 நாட்களை கடந்துள்ளார். குறிப்பாக உறங்காமல் இருப்பதற்காக காஃவீன் உட்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் மக்கள் இந்த செய்தியை நம்ப மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.