ஜப்பான் மொழியில் இயக்குனர் ராஜமௌலியின் பிரம்மாண்டமான திரைப்படத்திற்கு போட்டியாக நடிகர் விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படம் வெளியாகயுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “மாஸ்டர்”. இந்த திரைப்படம் பிரமாண்டமாக உள்ளது. “மாஸ்டர்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தது பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. மேலும் இந்த திரைப்படம் நல்ல வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து “மாஸ்டர்” திரைப்படமானது ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்டு ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகயுள்ளது. இதனை தொடர்ந்து அதிகாரப்பூர்வ ஜப்பான் போஸ்டருடன் மாஸ்டர் திரைப்படமானது வருகிற நவம்பர் மாதம் 18-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபமாக தான் இயக்குனர் ராஜமெளலியின் “ஆர்ஆர்ஆர்” திரைப்படம் ஜப்பான் மொழியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.