இழப்பீடு தொகை வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டபூண்டி கிராமத்தில் முருகையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 வயதுடைய பாரதி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இந்த சிறுமி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு இழப்பீடு தொகையை வழங்காததால் வட்டியுடன் சேர்த்து 7 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் உத்தரவை நிறைவேற்றாத குற்றத்திற்காக நீதிமன்ற அலுவலர்கள் அரசு பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட்டனர்.