முன்னாள் கடற்படை அதிகாரி மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் வாய்ப்பு அளித்துள்ளது.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி முன்னாள் இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்ற மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற தடை செய்து தீர்ப்பளித்தது.
மேலும் அவருக்கு தேவையான தூதரக உதவியை பாகிஸ்தான் வழங்க வேண்டும் என்றும் அந்த தண்டனையை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய ஜாதவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறியது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத் தொடரானது நேற்று நடைபெற்றது. அதில் குல்பூஷன் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கும் விதமாக சர்வதேச நீதிமன்றம் மறுஆய்வு மசோதாவை சட்ட அமைச்சரான பரூக் நாசிம் அவர்கள் தாக்கல் செய்துள்ளார்.
இது குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் ஜாதவ் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். குறிப்பாக சர்வதேச நீதமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் விதமாக கடந்த 2௦19 ஆம் ஆண்டு அவசர சட்டத்தை பாகிஸ்தான் அரசு நிறைவேற்றியது. இதனை அடுத்து இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஜாதவ் சார்பில் வாதம் செய்ய வழக்கறிஞர் ஒருவரை நியமிக்குமாறு பாகிஸ்தான் அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரின் சார்பாக வாதடுவதற்கு பாகிஸ்தானை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை நியமனம் செய்யுமாறு கூறியது.
ஆனால் இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி இந்திய வழக்கறிஞரை நியமனம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணையானது கடந்த அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற்றது. இதனை அடுத்து வருகின்ற டிசம்பர் 9ம் தேதி விசாரணையின் போது ஜாதவ் சார்பில் வாதாடுவதற்கு வழக்கறிஞரை நியமனம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசிடம் தெரிவிக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.