ஒருவரை ஜாதி பெயரை சொல்லி திட்டிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தண்டரை ஒட்டம்பட்டு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் இதே கிராமத்தில் வசிக்கும் லிங்கேஸ்வரன், தினேஷ் மற்றும் முனியன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த லிங்கேஸ்வரன் உள்பட 3 பேரும் சேர்ந்து ராஜேந்திரனை ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டி தாக்கியதாக தெரியவந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் ஜாதி பெயரை சொல்லி திட்டிய காரணத்தினால் லிங்கேஸ்வரன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.