ஜாவா மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் புக்கிங் செய்த ஜாவா பைக் பிரியர்கள் சிறிது காலம் காத்திருக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது.
இந்தியாவில் ஜாவா நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஜாவா புதிய பைக்குகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து ஜாவா பைக் பிரியர்கள் முன்பதிவு செய்தனர். முன்பதிவு செய்தது முதல் இப்போது வரை பைக் எப்போது தமது கைக்கு வரும் என்று புக்கிங் செய்தவர்கள் தவித்து வருகின்றனர். ஜாவா நிறுவனமும் அதிகமாக முன்பதிவு செய்து திணறியது.
தற்போது முன்பதிவையும் ஜாவா நிறுத்திவிட்டது. முன்பதிவு செய்தவர்களுக்கு தற்போது பைக்கை டெலிவரி செய்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜாவா பைக் 1,64,000 ரூபாய்க்கும் ஜாவா 42 மாடல் 1,55,000 ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகிறது. ஜாவாபைக்குகள் மத்திய பிரதேசத்தில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலையில் தயாராகி வருகின்றன.
ஜாவா நிறுவனம், புக்கிங் செய்த டெல்லி மற்றும் பெங்களுரூ நகர மக்கள் இன்னும் 8 மாத காலத்திற்கு காத்திருக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது. இதேபோல், மும்பை மற்றும் கொல்கத்தா மக்கள் 7 மாதமும், ஹைதராபாத் மற்றும் சென்னை நகர மக்கள் 9 மாதமும் , பூனே நகர மக்கள் அதிகப்பட்சமாக 10 மாதமும் காத்திருக்க வேண்டும் என்று ஜாவா சார்பில் முன்பதிவு செய்த பிரியர்களிடம் கோரிக்கை வைதுள்ளது.