சருகு மானை பார்த்துள்ளீர்களா…? இதனை பார்ப்பதற்கு எலிக்கு கால் முளைத்தது போல் இருக்கும். இதற்கு ஜாவா மோஸ்ப்பியர் என்று மற்றொரு பெயரும் இருக்கிறது. இதனை பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருந்தாலும் இதனுடைய சந்ததி கிட்டத்தட்ட 34 மில்லியன் வருடமாக இருக்கிறது. இது எவ்வளவு சிறியதாக இருக்கிறதென்றால் இதனால் 30 சென்டிமீட்டர் அதாவது ஒரு பெரிய scale அளவிற்குதான் வளர முடியும். இதனுடைய எடை 500 கிராம் முதல் 16 கிலோ வரை இருக்கும்.
மேலும் இது உருவத்தில் மிகவும் சிறியதாக இருப்பதினால் மற்ற மிருகங்கள் இதனை எளிதாக அடித்துக் கொன்று விடும். இது மற்ற மிருகங்களிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக தண்ணீருக்குள் சென்று ஒழிந்துகொள்ளும். இதனால் சுமார் 4 நிமிடம் வரை தண்ணீருக்குள் மூச்சை அடக்கிக் கொண்டு இருக்க முடியும். இவ்வளவு அழகாக இருக்கும் மான் தற்பொழுது ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் ஐந்து வகை மட்டும்தான் இருக்கிறது. அதுவும் தற்போது அழிந்து கொண்டே இருக்கிறது.