Categories
Uncategorized தேசிய செய்திகள்

“ஜவாத் புயல் எதிரொலி” 95 ரயில்கள் ரத்து… ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!

மத்திய மேற்கு வங்க கடலில் ஜவாத் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அந்தமான் அருகே நிலைகொண்டிருந்த நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் ஜவாத் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் ஜவாத் புயல் உருவாகியது. இது மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளதாகவும் டிசம்பர் 5-ம் தேதி வடக்கு ஆந்திரா-ஒடிசா இடையில் புயல் கரையைக் கடக்கும் என தெரிகிறது.

இவ்வாறு புயல் கரையைக் கடக்கும் வேளையில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இந்நிலையில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஒடிசாவில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது இந்த புயல் எச்சரிக்கையாக ஒடிசா கடற்கரை மார்க்கமாக செல்லும் 95 ரயில்களின் சேவை 3 நாட்களுக்கு ரத்து செய்து அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |