Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஜவ்வாது மலைக்கு இடம்பெயரும் பட்டாம்பூச்சிகள்…!!

 மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை காரணமாக கண்ணை கவரும் பட்டாம்பூச்சிகள் ஜவ்வாது மலைக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.

பட்டாம்பூச்சிகள் பொதுவாக அடர் காடுகளில் மலைப் பிரதேசங்களில் வாழும் தன்மை கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள சில வகை பட்டாம்பூச்சிகள் அங்கு பெய்து வரும் மழை பொழிவால் தற்போது கிழக்கு தொடர்ச்சி  மலைகளில்  அங்கமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை போன்ற மலை பிரதேசங்களில் தற்போது படையெடுத்து வருகின்றன.

ஜவ்வாது மலையை  பொறுத்த வரையில் முரசை, இலந்தை , காட்டு எலுமிச்சை என்று சொல்லக்கூடிய குறிப்பிட்ட மர வகைகள் அதிக அளவில் காணப்படுவதால் இந்த மரத்தின் கிளைகளில் முட்டையிட்டு தற்போது பட்டாம்பூச்சிகள் உருமாறி வண்ண வண்ண நிறங்களில் பறந்து மக்களைக் கவர்கின்றன.

Categories

Tech |