Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய் – சுந்தர்.சியின் ”பட்டாம்பூச்சி” திரைப்படம்…. விறுவிறுப்பான டீசர் ரிலீஸ்….!!!

‘பட்டாம்பூச்சி’ படத்தின் விறுவிறுப்பான டீஸர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 3. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் தலைநகரம்2, வல்லான் போன்ற திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. இதனையடுத்து, நடிகர் ஜெய் மற்றும் சுந்தர். சி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ”பட்டாம்பூச்சி”.

Sunder C - Jai co-starrer horror film 'Pattampoochi ' || சுந்தர் சி - ஜெய் இணைந்து நடிக்கும் திகில் படம், 'பட்டாம்பூச்சி'

மே மாதம் ரிலீசாகும் இந்த படத்தை குஷ்பூ சுந்தர் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹனிரோஸ் வர்கீஸ் மற்றும் இமான் அண்ணாச்சி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் விறுவிறுப்பான டீஸர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

Categories

Tech |