அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த பரபரப்பு தகவல் ஒன்றை அமைச்சர் ஜெயக்குமார் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா பாதிப்பிற்கு பின்பு விரைவில் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், அதற்கான பணிகளில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய அதிமுக அரசின் கட்சியிலும் அடுத்த முதல்வர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தற்போது இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு தகவல் ஒன்றை அளித்துள்ளார். அதில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பற்றிய முடிவை கட்சி உரிய நேரத்தில் முடிவு செய்யும். அதிமுக புது வரவை எதிர்பார்த்து உள்ளது என்றார். மேலும் பாஜக தலைமையில் கூட்டணி அமைப்பது பற்றியும் பின்னரே முடிவு செய்வோம் என்றும் கூறியுள்ளார். இதிலிருந்தே முதல்வருக்கான வேட்பாளர் பட்டியலில் தற்போதைய முதல்வர் பழனிசாமி இல்லை என்பது நன்றாக தெரிய வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.