முதல்வராக எண்ணுபவர்கள் வேணுமென்றால் நித்யானந்தாபோல் தனியாக தீவு வாங்கி, முதலமைச்சர் ஆகலாம் என்று ஸ்டாலினை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.!!
சென்னையில் ராஜாஜியின் 141-வது பிறந்தநாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் அவரது உருவ சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி தங்களது மரியாதையை செலுத்தினர்.
இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்பொழுது, ஒரு குழப்பம் நிறைந்த கட்சி திமுக.மேலும் நீதிமன்றத்திடம் சென்று தேர்தலை ரத்து செய்யவும் முயற்சித்தனர். தீர்ப்பு வந்த பின் அதை ஏற்றுக்கொள்வதாக கூறிய ஸ்டாலின், தற்போது நீதிமன்றம் சென்றுள்ளார். உள்ளாட்சி தேர்தலை வரவேற்பதாகவும், அதே சமயத்தில் நீதிமன்றம் சென்று மக்களை ஏமாற்றுக்கின்ற செயலை ஸ்டாலின் செய்து வருகின்றார் என குற்றம் சாட்டினார்.
மேலும், முதல்வர் ஆகும் கனவோடு தான் ஸ்டாலின் இருக்கிறார். எனவே அவர் நித்தியானந்தா போல ஒரு தீவை விலைக்கு வாங்கி அங்கு வேண்டுமானால் முதல்வராக ஸ்டாலின் ஆகலாம். தமிழகத்தில் ஒரு நாளும் ஸ்டாலினால் முதல்வராக இயலாது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.தோல்வி பயத்தின் காரணமாக எதாவது செய்து தேர்தலை நிறுத்த முடியுமா என்று பார்த்து வருகிறார்கள் திமுகவினர் என்றும் அவர் கூறினார்.