Categories
அரசியல் மாநில செய்திகள்

லாயக்கு இல்லாத தமிழக அரசு… தூங்கிக் கொண்டிருக்கிறதா என ஜெயக்குமார் விமர்சனம்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஏவா வேலு என்ற  அமைச்சரின் அறிக்கையை பாருங்கள். எப்படி எல்லாம் நிர்வாகத்தை நடத்த தெரியாத, ஒரு லாயக்கு இல்லாத, ஒரு அரசாங்கம் இன்றைக்கு ஆண்டு கொண்டு இருப்பதற்கு அவர் ஒப்புதல் வாக்குமூலமே போதும்.  அரசாங்கம் என்ன செய்து கொண்டு இருக்குக்கீன்றது? தூங்கிக் கொண்டிருக்கிறதா ?

ஒரு பொருளை  கொள்முதல் செய்தால் ? இது சரியா ? அப்படி இருந்தால் வாங்குவோம். இல்லை என்றால் வாங்க மாட்டோம். அவரே சொல்கிறார்… வெல்லம் கொடுத்தால் உருகிய வெல்லம் என்று சொல்கிறீர்கள்… மிளகு கொடுத்தாள் பூச்சி என்கிறீர்கள்…. அரிசி கொடுத்தால் குறை என்கிறீர்கள்… சர்க்கரை கொடுத்தால் அதில் குறை சொல்கிறீர்கள்…. புளி கொடுத்தால் குறை சொல்கிறீர்கள்… புலியில் பள்ளி இருக்குன்னு சொல்லுறீங்க.. பள்ளி இருக்கு பள்ளியை சொல்லுறாங்க….

உருகிய வெல்லத்தை உருகிய வெல்லம் என்று தான் சொல்ல முடியும், மிளகு வந்து பப்பாளி விதையை சேர்த்து கொடுக்குறீர்கள், அதை பப்பாளி விதை தான் சொல்ல முடியும். இதை மாற்றியா சொல்ல முடியாது. அப்படி இருக்கும்போது ஒரு அலுவர்கள்  இருக்கிறார்கள், நிர்வாகம் இருக்கிறது, உரிய கம்பெனிக்கு கொடுத்து எல்லாமே சரி பார்த்து,  முறையாக மக்களுக்கு போனால் ஏன் மக்கள் குறை சொல்கிறார்கள் ? என தெரிவித்தார்.

Categories

Tech |