செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, எனக்கும் செய்தியாளர்களுக்கும் எப்போதும் நல்ல உறவு இருக்கும், அதை நான் கெடுத்துக் கொள்வதற்கு விரும்பவில்லை, கீழேயும் போகவில்லை பேசுவதற்கு.. ஜெயக்குமார் ஒரு காலத்தில் ஓபிஎஸ் காலை பிடித்து மேலே வந்தார்கள், மீண்டும் ஓபிஎஸ் காலை பிடித்து வர வேண்டும் என்று நினைத்தால் விடவே மாட்டோம். இந்த கட்சி ஒன்றாக சேர்ந்தால் கூட, நீங்கள் எங்கேயாவது போகணுமே தவிர அனாதையா ?
இந்த கட்சிகளுக்குள் உங்களுக்கு இடமே கிடையாது, நீங்கள் அடுத்தவர்களை பார்த்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று தினகரன் மோசம் செய்தார், அங்கே மோசம் செய்தார் என்று மோசமான ஒரு அரசியல் சூழ்நிலையை உருவாக்கி துரோகத்தின் உச்சியில் நிற்பவர் தான் பழனிச்சாமி. ஏன் இவ்வளவு பேசுகின்ற ஜெயக்குமாரை நீங்கள் கேட்கவே மாட்டேங்கிறீர்கள், பொதுச்செயலாளர் பதவி வேண்டாம் என்று விதியை திருத்தி தூரமாக வைத்தீர்கள்.
அந்த பொதுச் செயலாளர் பதவிக்கு வரவேண்டும் என்று ஏன் பழனிச்சாமி துடிக்கிறார் என்று கேளுங்கள், அவர் பதில் சொல்லட்டும். ஏன் துடிக்கிறார், அம்மா வகித்த பதவியே வகிக்க மாட்டேன் என்று சொன்னார், இடியமீனை விட மோசமாக இருக்கிறார். யூதாஸ் காட்டி கொடுத்தார்களோ.. காசுகளுக்காக அது மாதிரி கேரக்டர் ஜெயக்குமார் என காட்டமாக விமர்சித்தார்.