முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களது மரணத்தில் மர்மம் உள்ளதாக எழுந்த வழக்கில் இன்று விவாதமானது நடைபெற்றது இந்த விவாதத்தில் எப்படி அப்போலோ மருத்துவம் ஒரு அரசியல் தலைவருக்கு சரியான சிகிச்சை செய்யவில்லை என்று குறை கூறலாம் என்று அப்போலோ தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்..
மாண்புமிகு முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இது குறித்து அப்போலோ மருத்துவமனை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதற்கு என்று விசாரிக்க தனி குழு ஒன்றும் அமைக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து பல்வேறு விசாரணைகள் என்பது தொடர்ந்து நடந்து வந்த வேளையில் அதற்கான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு கொண்டே இருந்தது .
இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் விசாரணை வழக்கானது நடைபெற்றது இதில் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் அவர்களுக்கும் எதிர் தரப்பு வழக்கறிஞர் அவர்களுக்கும் பெரிய அளவில் வாதமானது நடைபெற்றது இந்த மனுவை நீதிபதிகள் சுப்பையா கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர் .
மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர் பி எஸ் வி ராமன் சுதந்திர இந்தியாவில் அரசியல் தலைவர்களுக்கு வழங்கிய சிகிச்சை போதுமானதா என விசாரிக்க படுவது இதுவே முதல்முறை என்றும் தவறான சிகிச்சை வழங்கியதாக வழக்கறிஞர் எப்படி கூற முடியும் இதற்கு நீதிமன்ற அமர்வுஅமைதி காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார் இதனிடையே ஆளும் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுந்தரராஜன் நியமித்த மருத்துவம் சொல்லும் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் விசாரணை கிட்டத்தட்டமுடிந்து விட்டதாகவும் கூறினார் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்