தமிழில் மிக பிரபல நடிகராக திகழும் தனுஷ் போயஸ் கார்டனில் புதிதாக கட்ட உள்ள வீட்டிற்கு பூமி பூஜை தொடங்கியுள்ளார்.
நடிகர் பாடலாசிரியர் இயக்குநர் தயாரிப்பாளர் பாடல்கள் என அனைத்திலும் ஒரு கை பார்த்தவர் தனுஷ் ஐஸ்வர்யா. எப்போதும் பிஸியாகவே இருக்கும் தனுஷ் கோலிவுட்டில் பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். கோலிவுட்டில் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் கலக்க இருக்கும் தனுஷ் “தி கிரே மேன்” படத்திற்கு கால்சீட் கொடுத்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் விரைவில் அமெரிக்கா செல்வதாக உள்ளார். இந்நிலையில் தனுஷ் தற்போது சென்னையில் போயஸ் கார்டனில் புதிய வீடு கட்டுவதற்கு பூமி பூஜை போட்டுள்ளார்.அப்பூமி பூஜையில் ரஜினிகாந்த் லதா ரஜினிகாந்த் தனுஷ்மற்றும் தனுஷ் ஐஸ்வர்யா போன்றவர்கள் கலந்து கொண்டர்கள்.