Categories
மாநில செய்திகள்

“ஜெ. மரண அறிக்கை” சசிகலாவை சிக்க வைக்க திட்டமா….? இல்ல உண்மையின் தொகுப்பா…..? திடீர் கேள்விகளால் குழப்பம்…..!!!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுக சாமியின் விசாரணை அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை போன்றவைகள் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் பல்வேறு விதமான கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. அதோடு அதிமுகவினர் இடையே ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின்படி முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், மருத்துவர் சிவக்குமார் மற்றும் சசிகலா ஆகியோர் மீது விசாரணை நடத்துவதற்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. இதனையடுத்து ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின்படி பல்வேறு நபர்கள் மீது விசாரணை நடத்தலாம் என்று கூறப்பட்டிருந்தாலு,ம் முக்கியமாக சசிகலாவை குறி வைத்துதான் அறிக்கை தயார் செய்துள்ளதாக சிலர் கூறுகிறார்கள்.

ஆனால் ஒரு சிலர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக இருந்த அனைத்து விதமான சந்தேகங்களையும் தீர்க்கும் விதமாக ஆணையத்தின் அறிக்கை இருப்பதாக கூறுகிறார்கள். தங்களை நல்லவர்கள் போல் காட்டிக் கொள்வதற்காக அதிமுக ஆட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட ஆணையம் கடைசியில் அவர்களுக்கு எதிராகவே மாறி விட்டது என சிலர் கூறும் நிலையில், ஆறுமுகசாமி உண்மையாகவும், நேர்மையாகவும் விசாரணை நடத்தி இருப்பதாக அவரை பாராட்டவும் செய்கின்றனர்.

இருப்பினும் ஆணையத்தின் அறிக்கையில் எல்லாமே யூகங்களாக இருக்கிறதே தவிர எதுவுமே ஆதாரப்பூர்வமாக இல்லை என்பதும் சிலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. அறிக்கையில் ஆறுமுகசாமி எழுதியிருக்கும் குறட்பாவானது அறிக்கையின் முடிவை எழுதிவிட்டு தொடக்கத்தை தொடங்கினாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜெயலலிதா மரண வழக்கில் பல்வேறு விதமான உண்மை முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் இருக்கும் நிலையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதேபோன்றுதான் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையும் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.

Categories

Tech |