Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

என்னை கேட்காமல் படம் எடுக்க கூடாது…. கெளதம் மேனனுக்கு ஜெயலலிதா அண்ணன் மகன் மிரட்டல்…!!

தங்களுடன் அனுமதி பெறாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக எடுக்கக்கூடாது என்று இயக்குனர் வாசுதேவ் மேனனை தீபக்குமார் எச்சரித்துள்ளார். 

பிரபல அரசியல் தலைவரின் வாழ்வை மையமாகக் கொண்டு ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் QUEEN என்ற இணையதள தொடரை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ள தகவல்கள் தெரியவந்துள்ளதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து தலைவி என்ற பெயரில் இயக்க உள்ள இயக்குனர் விஜய் தன்னை நேரில் சந்தித்து முழு கதையும் கூறி முன் அனுமதி பெற்றதாக தீபக் தெரிவித்துள்ளார்.

Image result for gautham menon jayalalitha

உண்மையை மட்டுமே படமாக்க உள்ளதாகவும் வேறு எந்த வழியிலும் ஜெயலலிதா குறித்த அவதூறு காட்சிகள் இருக்காது என்றும் விஜய் உறுதி அளித்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்படி இருக்கையில் இந்த அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை கௌதம் வாசுதேவ் மேனன் படமாக்க உள்ளார் என்பதையும் queen என்று அவர் குறிப்பிடுவது யாரை என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தங்கள் குடும்பத்தினரின் முன் அனுமதி பெறாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாகவோ இணையத்தள தொடராகவோ எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கௌதம் வாசுதேவ் மேனனுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |