சிலரின் சுயநலத்தால் திமுக மீண்டும் எழுந்துவிடுவதை தடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். மேலும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற ஆளுமையை தலைவர் இல்லாத முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா சென்னை வந்துள்ளார். இதனால் அதிமுகவில் பெரும் குழப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சசிகலா வருகைக்கு வரலாறு காணாத வரவேற்பு கொடுத்தவர் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் எனவும், ஜெயலலிதாவை தொண்டர்கள் களத்தில் ஒற்றுமையாக நின்று திமுகவை வீழ்த்த வேண்டுமென்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். சிலரின் சுயநலத்தால் திமுக மீண்டும் எழுந்துவிடுவதை தடுப்பதில், நம்முடைய முழு கவனமும் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.