கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர்.
மேலும் அதிமுக சார்பில் ஜெயராஜ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறியுள்ளனர். காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணமடைந்து துயர நிகழ்வு மிகவும் வேதனைக்குரியது என தெரிவித்துள்ளனர். முன்னதாக திமுக சார்பில் சாத்தான்குளம் ஜெயராஜ் குடும்பத்திற்கு ரூ.25 நிவாரணம் வழங்குவதாக தெரிவித்த நிலையில், தற்போது அதிமுக சார்பிலும் நிவாரணம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை கைது செய்துள்ளனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைத்தனர். இந்த நிலையில் 22ம் தேதி இரவு பென்னிக்ஸ் உயிரிழந்துள்ளார்.
அதனை தொடர்ந்து, அவரது தந்தை 23ம் தேதி காலை ஜெயராஜும் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இரண்டு எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தந்தை, மகன் இருவரின் உடலையும் 3 மருத்துவர்களைக் கொண்ட குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு, போலீசார் அடித்து கொன்றதாக ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். எனவே உயிரிழந்த இருவரின் உடல்களை வாங்க உறவினர் மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, சாத்தான்குளம் சம்பவத்தில் பிரேத பரிசோதனை மையத்திற்கு கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் வந்து மருத்துவ கல்லூரி முதல்வருடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதையடுத்து நேற்று இருவரின் பிரேதபரிசோதனை முடிந்தது. இதையடுத்து, இருவரை இழந்த குடும்பத்திற்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் வழங்குவதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து இன்று அதிமுக சார்பில் ஜெயராஜ் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்குவதாக அதிமுக அலுவலகம் கூறியுள்ளது.