Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சர்ச்சையை ஏற்படுத்திய படம்…. கட்சியினர் முற்றுகை…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

நடிகர் சூர்யா மற்றும் அவரின் மனைவி ஜோதிகாவை கைது செய்யுமாறு கூறி காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தை பா.ம.க-வினர் முற்றுகையிட்டு மனு அளித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் எம்.எல்.ஏ-வான டி.கே. ராஜா மற்றும் பா.ம.க-வினர் தலைமையில் முற்றுகையிட்டுள்ளனர். அப்போது அவர்கள் காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியதாவது, சூர்யா தயாரித்து நடித்த திரைப்படம் ஜெய்பீம். இதனை சமீபத்தில் அமேசான் வெளியிட்டுள்ளது. இதில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

அதன்பின் சாதி பிரிவினை ஏற்படுத்தும் வகையில் படம் எடுத்த சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோரை கைது செய்து படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இதைப்போல் இம்மாவட்ட டவுன் காவல்நிலையத்தில் நகரச் செயலாளர் கராத்தே சிவா தலைமையிலும் மற்றும் தாலுகா காவல்நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதாசிவா தலைமையிலும் ஞானவேல், சூர்யா மற்றும் ஜோதிகா மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ம.க-வினர் புகார் மனு அளித்துள்ளனர். மேலும் அவர்களை கைது செய்யுமாறு கூறி கோஷங்களை எழுப்பி உள்ளனர்.

Categories

Tech |