”குற்றம் குற்றமே” படத்தின் ரொமான்டிக்கான பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெய். இவர் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து ரசிகர்கள் மத்தயில் பிரபலமானார். இவர் நடிப்பில் பட்டாம்பூச்சி, எண்ணித்துணிக, பிரேக்கிங் நியூஸ் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.மேலும் இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் இவர் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”குற்றம் குற்றமே”. இந்த திரைப்படம் தமிழ் புத்தாண்டன்று நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் காளி வெங்கட் ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் ரொமான்டிக்கான பாடல் வெளியாகியுள்ளது.