Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருடப்பட்ட ஜே.சி.பி எந்திரம்….. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஜே.சி.பி எந்திரத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேரியந்தல் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஜே.சி.பி எந்திரம் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 26 – ஆம் தேதியன்று வழக்கம்போல் வீட்டிற்கு அருகே உள்ள பகுதியில் ஜே.சி.பி எந்திரத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.

அதன்பிறகு மறுநாள் காலையில் ஜே.சி.பி எந்திரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது கோவிந்தசாமிக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் நிலையத்திற்கு சென்று கோவிந்தசாமி புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்துள்ளனர். அதன்பிறகு ஜான்சன் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஜே.சி.பி எந்திரம் மற்றும் காரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து ஜே.சி.பி எந்திரத்தை திருடியது எம்.ஜி.ஆர் நகரில் வசிக்கும் பாண்டிய துறை, திருமால், சங்கர் மற்றும் சுரேஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஏற்கனவே ஜே.சி.பி எந்திரங்களை திருடிச் சேலத்தில் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |