சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீர் சாஹூ (12) என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் கபடி போட்டியில் சிறப்பான முறையில் விளையாடியுள்ளார். இந்நிலையில் சிறுவன் தன்னுடைய நண்பர்களிடம் நீங்கள் யாரும் சரியாக விளையாடவில்லை என்று விளையாட்டாக கூறி கேலி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் நண்பர்கள் சமயம் பார்த்து திடீரென சாஹூவை கடத்திச் சென்றுள்ளனர். அதன்பின் சாஹூவின் வாயில் துணியை வைத்து அடைத்து சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியுள்ளார்.
அதன்பின் சிறுவனின் தலையில் நண்பர்கள் கல்லை தூக்கி போட்டு கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது சிறுவனை கொலை செய்த குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சிறுவனை கபடி போட்டியில் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக வாலிபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.