17 வயதுடைய ஒரு பெண்ணிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்தப் குழந்தையினுடைய அம்மா அப்போதுதான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தார். அதன்பின் திடீரென்று அந்த குழந்தையின் அம்மா அப்பா பிரிய நேரிடுகிறது. அதனால் அந்த குழந்தையின் அம்மா தனது குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேறு ஒரு திருமணத்தை செய்து கொள்கிறார். அந்தக் குழந்தைக்கு சிறு வயதில் இருந்தே அறிவியலின் மேல் அதிக ஆர்வம்.
அவனுடைய அறிவியல் ஆர்வத்தின் சான்றாக தனது அறை கதவின் பின்புறம் ஒரு அலாரம் சிஸ்டத்தை பொருத்தி நிருபித்துள்ளான். அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவர் ஆனாலும் அறிவியலின் மேல் உள்ள ஆர்வம் குறையவில்லை. அந்த பையன் தனது படிப்பை முடித்துவிட்டு நல்ல வேலைக்கு சென்று அந்த நிறுவனத்தின் vice-president ஆகவும் ஆகிறான். இந்நிலையில் திடீரென்று அந்த பையனுக்கு ஒரு சிந்தனை எழுந்துள்ளது.
அது என்னவென்றால் “நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் அதனுடைய லாபம் நமக்கு கிடைக்கவில்லை. லாபம் நிறுவனத்தின் ஓனருக்கு தான் கிடைக்கிறது” என்று நினைத்துள்ளார். இதனைப் பற்றி அவனுக்கு திரும்பத் திரும்ப சிந்தனை எழுந்துகொண்டே இருந்துள்ளது. இது குறித்து அவர் தனது தாய் தந்தையரிடம் பேசியுள்ளார். அவனுடைய பெற்றோர் ” நீ நல்ல வேலையில் தான் இருக்கிறாய். உனக்கு ஏன் இந்த கவலை. நீ மனதை குழப்பி கொள்ளாதே” என்று கூறி விடுகின்றனர்.
அதன் பின்பு அவருக்கு இதனை பற்றிய சிந்தனை அதிகமாகி “80 வயதிற்கு பிறகு பென்ஷன் பணத்தை வாங்கிக்கொண்டு நம்முடைய வாழ்க்கையை இப்படி வாழ்ந்து இருக்கலாமே, அப்படி வாழ்ந்து இருக்கலாமே என்று நினைத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதற்கு பதிலாக நான் இப்பொழுதே ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும்” என்று நினைத்துள்ளார். அதன்பின் இவர் ஒரு வெப்சைட்டை தொடங்கி அதில் புத்தகத்தை விற்க தொடங்கியுள்ளார். அந்த வெப்சைட்டை தான் நாம் இப்போது AMAZON என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்த நபர் வேறு யாரும் இல்லை அமேசான் நிறுவனரான ஜெப் பெசோஸ் தான்.