தமிழக மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதில் சிக்கல் இருப்பதால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தேசிய தேர்வு முகமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2020 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி என்று மட்டுமே வழங்கப்பட்டது. அதனால் ஜேஇஇ விண்ணப்பிப்பதில் தமிழக மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் உள்ளீடு செய்வதில் இருந்து விளக்கு கோரி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாணவர்கள் JEE தேர்வு எழுத உரிய தீர்வு காணப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Categories