Categories
அரசியல்

JEE மெயின் தேர்வு தேதி திடீர் மாற்றம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

ஜேஇஇ மெயின் தேர்வு தேதி மாற்றம் செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. என்ஐடி, ஐஐஐடி, ஐஐடி போன்ற மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்க்கை பெற ஜேஇஇ என்ற நுழைவுத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஜேஇஇ முதன்மை தேர்வு தேதிகள் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த முதற்கட்ட நுழைவுத் தேர்வு ஜூன் 20ஆம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட மெயின் தேர்வு ஜூலை 21 முதல் 30 வரையிலும் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. முன்னதாக ஜேஇஇ மெயின் தேர்வு ஏப்ரல் 21,24,25,29 மற்றும் மே 1,4 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |