ஜெஇஇ தேர்தலில் 24 மாணவர்கள் சதம் பெற்றுள்ளனர் என தேர்வு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்காக, சென்ற ஜனவரி மாதத்திலும் அதைத் தொடர்ந்து, இந்த மாதம் 1ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரையிலும் ஜெஇஇ முதன்மைத் தேர்வு நடைபெற்றது. இவ்வாறு இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த ஜெஇஇ முதன்மைத் தேர்வின் முடிவில், 24 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள ஜெ.இ.இ தேர்வு முடிவில், தெலங்கானாவில் 8 மாணவர்களும், டெல்லியில் 5 மாணவர்களும், உள்ளிட்ட 24 பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வுப் பட்டியலில் முதல் 2 லட்சத்து 45 ஆயிரம் இடங்களுக்குள் இடம் பிடித்தவர்கள் மட்டுமே, ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வை எழுத இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.