JEE mains 2022 ஆம் ஆண்டுக்கான தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
CBSE 2022-ம் ஆண்டுக்கான 2-ம் ஆண்டு தேர்வுக்கு முன்பு ஏப்ரல் மாதத்தின் இடையில் நடைபெறவிருக்கும் கூட்டு நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது CBSCE யின் 2 கால தேர்வுகள் JEE உடன் ஒத்துப் போகிறது. எனவே கூட்டு நுழைவுத் தேர்வின் 2 முயற்சிகளுக்கு இடையே அதிக இடைவெளி வழங்கவேண்டுமென மாணவர்கள் NTA மற்றும் கல்வி அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளனர். ஒரு முன்னணி போர்ட்டலிடம் பேசிய CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பொதுவாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நுழைவுத்தேர்வுகள் திட்டமிடப்பட்டிருக்கும் போது தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறினார். இதனால் மாணவர்கள் சமூக ஊடகங்களில் தங்களின் கோரிக்கைகளை தீவிரப்படுத்தினர். இவர்கள் #JEE Students Want justice என்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி தேர்தலை மனதில் கொண்டு தேர்வுக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆர்வலர்கள் கூறினர். இதனையடுத்து JEE ஒரு காமெடி கிடையாது. இதன் மூலம் மாணவர்களின் தண்டிக்கப்படுகிறார்கள் என மாணவர்கள் ட்விட்டரில் கேள்விகளை கேட்டுள்ளனர். மேலும் #JEE Mains After Bords மற்றும் #Modiji Help JEE Mains Students என்ற ஹேஷ்டேக்குகளையும் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.